Saturday, July 27, 2013

பேனர் தடை சட்டம் .... காவல்துறை என்ன நடவடிக்கை

 புதுச்சேரியில் 3 மாதத்திற்க்கு முன்பு காவல்துறையினர் புதுச்சேரி மாநிலத்தில் இருந்த அத்துனை பேனர்களையும் அதிரடியாக நீக்கினார்கள். அப்போது யார் கட்டளையிட்டது என்று தெரியவில்லை. தற்போது புதுச்
சேரியில் பேனர்கள் இல்லாத இடம் கிடையாது அத்துனை இடத்திலும் மாநில முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பெரிய பேனர்கள். குறிப்பாக இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவு காந்தி சதுக்கம் என் புதுச்சேரி முழுவதும் பேனர்கள். மதிப்பிற்க்குறிய மாவட்ட  கலெக்டர் அவர்களும் காவல்துறை அதிகாரிகளும் நல்ல அதிகாரியாக இருந்தால் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்ககும் அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்...  ஆனால் காவல்துறை வீரத்தை இரண்டு சக்கர வாகனம் மடக்கி அவர்களை மிரட்டுவதும்..

Friday, July 26, 2013

பாரதீய ஜனதா கட்சியினர் பந்த் பந்த் போராட்டத்தில் பெண் என்ஜினீயர் முகம் சிதைந்தது.

புதுவை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் கணேஷ். இவர் புதுவை கருவூலத்தில் கேசியராக பணிபுரிகிறார். இவரது மகள் சியாமளா (வயது 23). இவர் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். 
இவர் கடந்த 22–ந் தேதி அதிகாலையில் புதுவையிலிருந்து சென்னைக்கு தமிழக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியினர் பந்த் போராட்டம் நடத்தினர். இந்த பந்த் போராட்டத்தில் பல்வேறு அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவன பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.
இந்த கல்வீச்சு சம்பவம் பெண் என்ஜினீயர் சென்ற பஸ்சின் மீதும் நடைபெற்றது. இதில் அவர் பஸ்சின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்ததால் அவரது முகம் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் சிதைந்தது. இதனால் அவர் உடனடியாக பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சியாமளாவின் முகம் வீக்கமாக காணப்படுகிறது. நாளை அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பிம்ஸ் ஆஸ்பத்திரியின் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் சரத் இந்த ஆபரேசனை செய்கின்றார்.
சியாமளா மீது நடந்த கல்வீச்சை கண்டித்து இளைஞர் காங்கிரசார் இளையராஜா தலைமையில் புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்–அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் கவர்னர் வீரேந்திர கட்டாரியாவை சந்தித்து மனு அளித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் என்ஜினீயர் சியாமளாவுக்கு புதுவை அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்தனர். அரசு சார்பில் அல்லது தனது சொந்த பொறுப்பில் நிதி உதவி செய்வதாக கவர்னர் வீரேந்திர கட்டாரியா உறுதியளித்தார்.
அதன் அடிப்படையில் இன்று காலை 10.30 மணியளவில் பிம்ஸ் ஆஸ்பத்திரி வந்த அவர் மாணவி சியாமளாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிசிச்சைக்காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்

காங்கிரஸ் கட்சிக்கு பிச்சைக்காரன் கேள்வி


Wednesday, December 29, 2010

child labour

குழந்தைகளுக்கான இலவசக் ட்டாய்க கல்வி உரிமைச் சட்டம் 2009

நம் நாடு சுதந்திரம பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வி உரிமைச்சட்டம் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் 6 வயது முதல் 14 வயது வரைஉள்ள அனைவருக்கும் கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 86வது திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனவே அனைவரும் நினைத்து விட்டார்கள் கல்வி என்பது அனைவருக்கும் கிடைத்து விட்டது என்று ஆனாலும் இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 22 கோடி அதில் 4.6 சதவீதம் பேர் அதாவது 92 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வெளியே இருக்கிறார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கூறுகிறது.

இருந்தாலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்னமும் பல குழந்தை தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். இதற்க்கு யார் காராணம்………………..

சட்டம் மட்டும் தான் நாங்கள் பொடுவோம் ஆனால் அதை பின்பற்றவேண்டியது அரசாங்கம் அரசாங்கம் நினைத்தால் வேலை செய்யும் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்களாம். ஆனால் அவர்கள் முன்வருவதில்லை……

புதுவையில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி கல்விக்கு கண் கொடுத்தவர் காமராஜர் அவருடை ஆட்சி என்று செல்லிக்கொண்டு கல்வி கற்கும் மாணவர்களின் நிலைமையை பாரீர்..

புதுச்சேரியில் பரபரப்பாக இயங்கும் ஓர் இடம் கடற்கரைச்சாலை ஏன்என்றால் அதன் அருகில் சட்ட சபை, தலைமை செயலகம், கவர்னர் மாளிகை, கலைபண்பாட்டு துறை, புதுச்சேரி நகராட்சி அலுவலகம் என் பல்வேறு அரசு அலுவலகங்கள் தினமும் பல ஆயிரம் மக்கள் நடைபொடும் சாலை பல அரசியல் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் வாக்கிங் செய்யும் இடம். ஆதனால் அந்த சாலையை அழகு படுத்தும் வேலையில் அரசாங்கம் 5 கோடிக்கும் மேல் பணத்தை ஓதுக்கி சாலையை மேம்படுத்தி வருகின்றது. அந்த வேலையில் … புதுச்சேரியில் கலை பண்பாட்டைவளர்க்க வேண்டிய அலுவலகம் முன்பு கல்வி கற்க்கும் மாணவர்கள் மண்வேட்டி வைத்துக் கொண்டு மண்வாருவதா…காங்கரஸ் அரசே நியாமா… உந்தன் மத்திய ஆட்சியில்தான் குழந்தைகளுக்கான இலவசக்கட்டாய்க கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது நியாபகம் இருக்கிறதா… அரசாங்கத்துக்கு மாணம் சூடு சூறனை இருந்தால் வேலை செய்யும் மாணவர்களை படிக்க வைக்குமா என்று பார்போம்……….

Sunday, December 26, 2010

வேலை வாய்ப்பு கானல் நீரே!

சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிரபல தொலைக்காட்சியில், ‘வேலை தேடி அலைந்தது அந்தக்காலம்! வேலை வீடு தேடி வருவது இந்தக்காலம்’ என்ற விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. பிரபல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்ய மாவட்டந்தோறும் வேலைச் சந்தை களை ஊயஅயீரள iவேநசஎநைறள யனே துடிb குயசைள நடத்தியதற்கான விளம்பரமே இது! இத்தகைய வேலைச் சந்தைகளில் எந்த அளவு வேலை கிடைத்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே! காலப்போக்கில் பல கல்லூரிகள் இத் தகைய வேலைச் சந்தைகளை நடத்தி அதன் மூலம் நல்ல வருவாயை பெருக்கிக்கொண்டதுதான் மிச்சம்! சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இத்தகைய வேலைச் சந்தை ஒரு கல்லூரி நிர்வாகத்தால் நடத்தப்பட்டு, அது வெறும் போலித்தனமானது என்பது தெரியவர, மாணவர்கள் கொதித்தெழுந்து அந்தக்கல்லூரி வளாகத்தையே ஒரு போர்க்களமாக மாற்றிக்காட்டினர்.

உலகம் ஒரு கிராமம் ஆகிவிட்டது என்று உலகமயத்தை வானளாவ புகழ் பவர்கள், உலகமயம், தாராளமயம், தனி யார் மயம் என்ற கொள்கைகள் வேலை வாய்ப்புகளை சிதைத்து வருவதை மறைக்கப்பார்க்கின்றனர். வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சி மட்டுமல்ல, உள்ள வேலைவாய்ப்புகளையும் பறிக்கும் வளர்ச்சியாக ‘மயங்களின்’ வளர்ச்சி உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தொலைத்தொடர்புத்துறையில் ஏற் படுத்தியுள்ள வேலைவாய்ப்புகளை மிகைப்படுத்திக்காட்டுகின்றனர். தற்போதைய பொருளாதார வீழ்ச்சி இத னையும் அம்பலப்படுத்திவிட்டது. இத் தகைய துறைகளில் பணியாற்றுபவர்கள் ஆயிரக்கணக்கில் பணி இழந்து நாடு திரும்பி வருகின்றனர். கடந்த ஆண்டு (2009) நாடாளுமன்றத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டு நிறு வனங்கள் விசாவை புதுப்பிக்காமல் விட்டு விட்டதால் 20 ஆயிரம் இந்தி யர்கள் வேலை இழந்து நாடு திரும்பி யுள்ளனர் என்று தெரியவருகிறது. இன்று லட்சக்கணக்கானோர் வேலையிழப்பை யும், ஊதியக் குறைப்பையும் சந்தித்து வருகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு

இந்த ஆண்டு (2010) செப்டம்பர் மாதத்தில் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) கூட்டு மாநாட்டில், மோசமாகி வரும் இன்றைய வேலையின்மை மற்றும் வறுமை குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநாட்டில் வைக்கப்பட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் 2010-ம் ஆண்டு இதுவரை மட்டும் 210 மில்லியன் தொழிலாளர்கள் வேலை யின்றி உள்ளனர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் வேலையின்மை என்பது 34 மில்லியன் உயர்ந்துள்ளது எனவும், உலகில் 80 சதவிகித மக்கள் எவ்வித சமூக நலத் திட்டங்களையும் கொண்டிருக்க வில்லை என்றும், கிட்டத்தட்ட 12 பில்லி யன் மக்கள் நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவாகவே ஊதியம் பெற்று வரு கின்றனர் என்றும், அமெரிக்காவில் வேலையின்மை என்பது 7.5 மில்லி யனிலிருந்து 15 மில்லியனுக்கு மேல் உயர்ந்துவிட்டது. ஐரோப்பா முழுவதும் 23 மில்லியனுக்கு மேல் வேலையில்லாமல் உள்ளனர். இது 2007-ல் இருந்ததை விட 36 சதவிகிதம் அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்மாநாட்டில் உரையாற்றிய, சர்வ தேச தொழிலாளர் அமைப்பின், வேலை கள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த ஐரோப்பிய ஆணையாளரான லாஸ்லோ ஆண்டர் குறிப்பிடுகையில், 2010 வேலை யின்மையை பொறுத்தவரை 2010-ம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என் றும் இதை சரியாக எதிர்கொள்ளவில்லை என்றால் 2011-ம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக மாறிவிடும் என எச்சரித் துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஎம்எப் தலைவர் டொமினிக் ஸ்ட் ராஸ் கான், ‘உலக நிதி நெருக்கடி என்பது, வேலையின்மை என்ற வீணடைந்த பூமியை கொண்டுவந்துள்ளது’ என்றும் ஒரு வேலை பெறுவது என்பது ‘வாழ்வா சாவா’ என்ற பிரச்சனையாக மாறிவிட் டது என்றும், உயரும் வேலையின்மை வன்முறை மோதல்களுக்கு வழிவகுக் கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்மாநாட்டின் முக்கிய பேச்சாளர் களான ஸ்பெயினின் பிரதமர் ஜோஸ் லூயி ரோட்ரிக்ஸ் ஜாபடெரோ, கிரேக்க அமைச் சர் ஜோர்ஜ் பாபபாண்ட்ரூ, வேலை யின்மை இப்படியே நீடித்தால் ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதன் விளைவாகவே சமீபத்தில் நடைபெற்ற பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சுவீடன் நாட்டு தேர்தல்களில் ஆளுங்கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டு, அங்கு தொங்கும் நாடாளுமன் றங்கள் அமைந்துள்ளன. அமெரிக்காவில் நவம்பரில் நடைபெற்ற தேர்தல்களில் ஓபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அமெரிக் காவில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. சரா சரியாக ஒரு மாதத்திற்கு 13 வங்கிகள் அங்கு மூடப்பட்டு வருகின்றன. ஊக்கு விப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட போதும் நிதி ஆதாரமின்றி வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. அங்கு கடந்த ஓராண்டாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலைமை உலகம் முழுவதும் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டு ஆவணம், வேலை இழப்பு களால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் அரசியல் திறனில் தீவிரமடைந்திருப் பதை சுட்டிக் காட்டுகிறது. உலகெங் கிலும் வேலை கிடைக்காத இளைஞர் களின் எண்ணிக்கை 6.6 மில்லியன் ஆகும். வேலையின்மை என்பது ஜனநா யகத்தின் திறன் குறித்து கேள்வி எழுப்பி யிருப்பதாகவும், இது ஒரு மாற்றுத் தலை மையை நாடிச் செல்லும் என்றும் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மா நாட்டில் கலந்துகொண்ட முதலாளித் துவ நாடுகளின் தலைவர்கள், வேலை யின்மை குறித்து கவலைப்பட்டவர் களாக காட்டிக்கொண்டாலும், முதலா ளித்துவம் அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகள் தொழிலாளர் வர்க்கத்தின ருக்கு எந்தவித தீர்வுகளையும் அளிக்க இயலாத நிலைமையை மாநாட்டு விவா தத்தில் காண முடிந்தது. இச்சூழலில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் களிடையே புரட்சிகர உணர்வுகள் எழுச்சி பெறுவது முதலாளித்துவ சக்தி களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டின் இறுதி அறிக்கையானது, “வேலைகளை தோற்றுவிக்கும் வளர்ச்சி” “வறுமையில் வாடும் மக்க ளுக்கு குறைந்தபட்சம் சமூகப் பாதுகாப்பு நிலை” ஆகியவற்றிற்கு உழைப்பதாக உறுதிமொழி கூறியுள்ளது.

இந்த மாநாட்டின் வாயிலாக முத லாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள உலகளவிலான நெருக்கடியை உணர்ந்து கொண்டுள்ளது. அது தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை பறித்திட திட்டமிட்டுள்ளது. தொழிலாளி வர்க்கம் இதை புரிந்துகொண்டு எதிர் தாக்குதலுக்கு தயாராவதே இன்று தலை யாயக் கடமையாக உள்ளது.
theekkathir

Wednesday, December 8, 2010





தோழர் பி.ஆர். இழப்பு என்பது அனைத்து ஜனநாயக இயக்கத்திரி0க்கும் பெரும் இழப்பாகும். ஆனைத்து வர்க வெகுஜென அமைப்புகளுக்கும் வழிகாட்சிய தோழர்



மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் முழுபெரும் தோழர் பி. ராமமூர்த்தி உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக் குழு உறுப்பினரும், முதுபெரும் தோழருமான பி. ராமமூர்த்தியின்(79) மறைவையொட்டி, ரெட்டியார்பாளையம் கட்சி அலுவலகமான தோழர் நல்லசிவம் நினைவகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், மாநில குழு உறுப்பினர் என். குணசேகரன், தா. முருகன், தனசேகரன், ஆர். ராமமூர்த்தி, கடலுhர், விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் டி. ஆறுமுகம், ஜி. ஆனந்தன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சிஐடியூ அகில இந்திய தலைவர் ஏ.கே. பத்மநாபன், தமிழ்மாநில நிர்வாகி கே. வைத்தியநாதன், சுகுமாறன், ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதா சுந்தர்ராமன் ஆகியோர் கைபேசி மூலம் பிரதேச செயலாளர் பெருமாளிடம் தங்களது இரங்களை தெரிவித்தனர்.
மேலும் சிபிஐ புதுவை சட்டமன்ற உறுப்பினர் ஆர். வி°வநாதன், அக்கட்சி நிர்வாகிகள் கீதநாதன், அபிஷேகம், சேது செல்வம், முன்னால் முதல்வர் என். ரங்கசாமி, காங்கிர° பிரதேசத் தலைவர் ஏ. வி. சுப்ரமணியன், பார்வர்டு கட்சியின் தலைவர் முத்து, குடியரசுக் கட்சி தலைவர் லயோன், அதிமுக செயலர் அன்பழகன், பாமக நிர்வாகி பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் தேவசகாயம். பா°கரன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வர்க்கவெகுஜென இயக்கங்களை சேர்ந்தவர்களும் அவரது உறவினர்களும் பி. ராமமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்
ரெட்டியார்பாளையம் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பி.ராமமூர்த்தி உடல், பவழகரஞ்சாவடி சுடுகாட்டில் இறுதி நிகழ்ச்சி நடைப்பெற்றது. மறைந்த தோழரது விருப்பப்படி கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், அவரது உடலுக்கு தீ மூட்டினார்.
பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மறைந்த தோழருக்கு புகழாரம் சூட்டினார்கள்.