Saturday, July 27, 2013

பேனர் தடை சட்டம் .... காவல்துறை என்ன நடவடிக்கை

 புதுச்சேரியில் 3 மாதத்திற்க்கு முன்பு காவல்துறையினர் புதுச்சேரி மாநிலத்தில் இருந்த அத்துனை பேனர்களையும் அதிரடியாக நீக்கினார்கள். அப்போது யார் கட்டளையிட்டது என்று தெரியவில்லை. தற்போது புதுச்
சேரியில் பேனர்கள் இல்லாத இடம் கிடையாது அத்துனை இடத்திலும் மாநில முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பெரிய பேனர்கள். குறிப்பாக இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவு காந்தி சதுக்கம் என் புதுச்சேரி முழுவதும் பேனர்கள். மதிப்பிற்க்குறிய மாவட்ட  கலெக்டர் அவர்களும் காவல்துறை அதிகாரிகளும் நல்ல அதிகாரியாக இருந்தால் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்ககும் அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்...  ஆனால் காவல்துறை வீரத்தை இரண்டு சக்கர வாகனம் மடக்கி அவர்களை மிரட்டுவதும்..

Friday, July 26, 2013

பாரதீய ஜனதா கட்சியினர் பந்த் பந்த் போராட்டத்தில் பெண் என்ஜினீயர் முகம் சிதைந்தது.

புதுவை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் கணேஷ். இவர் புதுவை கருவூலத்தில் கேசியராக பணிபுரிகிறார். இவரது மகள் சியாமளா (வயது 23). இவர் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். 
இவர் கடந்த 22–ந் தேதி அதிகாலையில் புதுவையிலிருந்து சென்னைக்கு தமிழக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியினர் பந்த் போராட்டம் நடத்தினர். இந்த பந்த் போராட்டத்தில் பல்வேறு அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவன பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.
இந்த கல்வீச்சு சம்பவம் பெண் என்ஜினீயர் சென்ற பஸ்சின் மீதும் நடைபெற்றது. இதில் அவர் பஸ்சின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்ததால் அவரது முகம் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் சிதைந்தது. இதனால் அவர் உடனடியாக பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சியாமளாவின் முகம் வீக்கமாக காணப்படுகிறது. நாளை அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பிம்ஸ் ஆஸ்பத்திரியின் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் சரத் இந்த ஆபரேசனை செய்கின்றார்.
சியாமளா மீது நடந்த கல்வீச்சை கண்டித்து இளைஞர் காங்கிரசார் இளையராஜா தலைமையில் புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்–அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் கவர்னர் வீரேந்திர கட்டாரியாவை சந்தித்து மனு அளித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் என்ஜினீயர் சியாமளாவுக்கு புதுவை அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்தனர். அரசு சார்பில் அல்லது தனது சொந்த பொறுப்பில் நிதி உதவி செய்வதாக கவர்னர் வீரேந்திர கட்டாரியா உறுதியளித்தார்.
அதன் அடிப்படையில் இன்று காலை 10.30 மணியளவில் பிம்ஸ் ஆஸ்பத்திரி வந்த அவர் மாணவி சியாமளாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிசிச்சைக்காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்

காங்கிரஸ் கட்சிக்கு பிச்சைக்காரன் கேள்வி