Tuesday, October 19, 2010

மேற்கு வங்காள மாவோயிஸ்டுகள்


மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜம்பா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோபால். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொண்டர். இவரது மனைவி ஜெயந்தி மந்திரி.
கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி இந்த கிராமத்துக்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் கோபாலையும், அவருடைய மகன் ராஜீவ்வையும் சுட்டுக் கொன்றனர்.
இதை தொடர்ந்து ஜெயந்தி மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ரகசியமாக பொதுமக்களை திரட்டினார்இதுபற்றிய தகவல் மாவோ யிஸ்டுகளுக்கு கிடைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மாவோயிஸ்டுகள் கடந்த 8-ந்தேதி இந்த கிராமத்துக்குள் புகுந்து ஜெயந்தியை கடத்தி சென்றனர். அவர் கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் ஜெயந்தி எரித்து கொல்லப்பட்ட நிலையில் காட்டுக்குள் பிண மாக கிடந்தார். அழுகிய நிலை யில் பிணம் இருந்தது.

மாவோயிஸ்டுகள் அவரை கற்பழித்து விட்டு பின்னர் எரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பீதி நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
source malaimalar