Saturday, April 24, 2010

nuclear deal

மன்மோகன் அரசாங்கம் மென்மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வெண்சாம ரம் வீசும் பாதையில் சென்று கொண்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டு மல்ல, தேசத்தின் இறையாண்மை மீது பற் றுள்ள பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அணு சக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தும் பணியில் இது அப்பட்டமாக வெளிப்பட்டு வருகிறது.

தனது அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு முன்பு சூரஉடநயச டயைbடைவைல bடைட எனப்படும்அணு விபத்து இழப்பீடு சட்டம்இந்தியா இயற்ற வேண்டும் எனவும் அச்சட் டத்தில் விபத்து நேரிட்டால் தன் நாட்டு நிறுவனங்களுக்கு இழப்பீடு என்ற பெயரில் பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடாது எனவும் அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. இதனை எவ்வித கூச்சநாச்சமும் இன்றி மன்மோகன் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஒரு சட்ட முன்வரைவை முன்வைத்துள்ளது. இது ஒரு அப்பட்டமான அமெரிக்க அடிமைச்சாசனம் எனில் மிகையல்ல.

அணு உலையில் விபத்து நேரிட்டால் அதற் கான மொத்த இழப்பீடு ரூ.2120 கோடி (460 மில்லியன் டாலர்கள்) மட்டுமே தரப்படும் என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே மிகவும் குறைவானது என நியாய மான கருத்து உள்ளது. போபால் நச்சுவாயு விபத்து வழக்கில் 1991ம் ஆண்டே உச்சநீதி மன்றம் இழப்பீடு தொகையை ரூ.2170 கோடி என நிர்ணயித்துள்ளது. கடந்த இருபது ஆண் டுகளில் உள்ள பணவீக்கத்தை கணக்கில் கொண்டால் இந்த தொகை ரூ.10,000 கோடிக் கும் அதிகமாக இருக்கும். நச்சுவாயு விபத் தைவிட மிக மிக அதிகமாக பாதிப்புகளை ஏற் படுத்தும் அணு உலை விபத்திற்கு இழப்பீடு ரூ.2170 கோடி என்பது மிகவும் குறைவு.

இந்த இழப்பீடு ரூ.2170 கோடியில் அணு ஆலைகளை நிர்மாணிக்கும் அமெரிக்க நிறு வனங்கள் தரவேண்டிய இழப்பீடு ரூ.500 கோடி இருந்தால் போதுமானது என சட்ட முன்வரைவு கூறுகிறது. அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் சொன்னதை சிரமேற்கொண்டு செயல்படும் ஆட்சியாளர்களாக நமது அர சாங்கம் உள்ளது. இந்திய மண்ணில் அணு உலைகளை அமெரிக்க நிறுவனங்கள் அமைக்குமாம்! கோடி கோடியாக இலாபம் ஈட்டுவார்களாம்! ஆனால் விபத்து நடந்தால் ரூ.500 கோடிக்கு மேல் இழப்பீடு என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்! அதனை சிறிதும் வெட்கமின்றி மத்திய அரசு தலை யாட்டி பொம்மையாக சரி என்கிறது.

உலகில் உள்ள வேறு சில நாடுகள் இந்த இழப்பீடு தொகையை எந்த அளவிற்கு நிர்ண யித்துள்ளன என்பதை ஒப்பீடு செய்தால் மன்மோகன் அரசின் அமெரிக்க தலையாட் டுத் தன்மையை நாம் புரிந்து கொள்ள இயலும்.

மன்மோகன் அரசாங்கத்திற்கு ரூ.500 கோடி என இழப்பீடு உச்சவரம்பை நிர்ண யிக்க நிர்ப்பந்திக்கும் அதே அமெரிக்காவில் இந்த இழப்பீடு தொகை ரூ.4,95,000 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனது தேச மக்களின் உயிர் மேலானது என எண்ணும் அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்திய மக்களின் உயிர்களை கிள்ளுக்கீரையாக எண்ணுகிறது என்பது இதிலிருந்து தெளிவாகும். இந்த விவரங்கள் தெரிந்திருந்தும் மன்மோகன் சிங் அரசு அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந் துள்ளது என்பது எவ்வளவு கொடுமையான ஒன்று?

வேறு சில நாடுகளின் இழப்பீடு தொகை பற்றிய விவரங்கள்:

ஜெர்மனி ரூ.152000 கோடி, சுவிட்சர் லாந்து ரூ.68200 கோடி, பின்லாந்து ரூ. 93000 கோடி, கனடா ரூ.30000 கோடி. சுவிட்சர் லாந்து, பின்லாந்து போன்ற சிறிய நாடுகள் கூட இழப்பீடு தொகையை கணிசமாக நிர்ணயித்திருக்கும் பொழுது, மன்மோகன் அர சாங்கம் வெறும் ரூ.500 கோடியை ஏற்றுக் கொண்டது அடிமைச்சாசனம் என்றால் மிகையாகுமா?

அணு உலை விபத்து எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உல கமே அறிந்த ஒன்று. அதற்கு நாகசாகி, ஹிரோசிமா குண்டுவீச்சு மட்டுமல்ல; செர் னோபில் போன்ற விபத்துக்களும் சாட்சி களாக உள்ளன. இவற்றையெல்லாம் புறக் கணித்துவிட்டு மன்மோகன் அரசாங்கம் அமெரிக்க நோக்கத்தை நிறைவேற்றிட முயன்றால் மக்கள் அதை முறியடிப்பார்கள்.

source: Theekathir

No comments:

Post a Comment