வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச தலைவர் மீது கொலை வெறி தாக்குதல் உதவி ஆய்வாளரை கைது செய்ய கோரி டிஒய்எப்ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச தலைவர் சந்துரு இவரது சகோதரர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராரில் போக்கு வரத்துத்துறை உதவி ஆய்வாளர் சண்முகம் தலையீட்டு தனது ஓயர்லக்ஸ் கருவியால் சந்துருவின் தம்பி சரவணனை தலையில் அடித்துள்ளார். இதில் சரவணன் தலையில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு காரணமான ஆய்வாளர் சண்முகம் மீது புகார் கொடுக்க சந்துரு பெரிய கடை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது ஆய்வளளர் தலைமையில் வந்த 20க்கும் மேற்பட்ட காவலர்கள் சந்துருவையும் அவரது சகோதரர்கள் சசிக்குமார், சரவணன் ஆகியோரை லத்தியாள் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு வலுகட்டாயமாக இழுத்துசென்று அங்கும் தாக்கியுள்ளனர். இதில் டிஓய்எப்ஐ பிரதேச தலைவர் சந்துருக்கு கை, மார்பு தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. அதே போல் அவரது சகோதரர்களுக்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடந்த இச்சம்பவத்தை மறைக்க போக்குவரத்துத்துறை உதவி ஆய்வாளர் சண்முத்தை தாக்கியதாக உண்மைக்கு மாராக சந்துரு அவரது சகோதரர்கள் மீது கொலை முயற்ச்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையின் இந்நடவடிக்கை கண்டித்தும் சந்துருவை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்து துறை சார்ந்த விசாரனை நடத்த வேண்டும். வாலிபர் சங்க தலைவர் மீது போட ப்பட்ட பொய் வழக்கை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி நேரு வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திர்க்கு டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள், டிஒய்எப்ஐ மத்திய கமிட்டி உறுப்பினர் எஸ்.ஜி. ரமே~;பாபு, முன்னால் பிரதேச தலைவர் லெனின்துரை, இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் அந்துவன், டிஒய்எப்ஐ பொருளாளர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
வாலிபர் சங்க பிரதேச நிர்வாகிகள் ஆர்.சரவணன், பி. சரவணன், அரிதாஸ், கதிரவன், தட்சணாமூர்த்தி, சண்முகம், பிரபாகரன், பாஸ்கர் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.